RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விஸ்தாரம் » சினிமா » சினிமா செய்திகள் » அஜீத்தே ஆனாலும்… மன்சூர் அலிகான் அதிரடி!

அஜீத்தே ஆனாலும்… மன்சூர் அலிகான் அதிரடி!

From: 'விஸ்தாரம்'

POST 1on 16/1/2014, 4:24 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விஜயா புரொடக்ஷ்ன்ஸ், பி.நாகிரெட்டியின் கலையுலக வாரிசுகள் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்து நடித்து நாளை திரைக்கு வர இருக்கும் வீரம் படத்திற்காக கடந்த 2 வார காலங்களாக ஒரு மெகா சைஸ் விளம்பர போர்டு சென்னை, வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோ வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

வடபழனி பஸ் டெப்போ அருகே ஆற்காடு சாலையில், நாகிரெட்டியின் வாரிசுகளுக்கு சொந்தமான விஜயா மருத்துவமனை எதிரே உள்ள விஜயா கார்டனும், நாகிரெட்டியின் வாரிசுகளுக்கு சொந்தமானது தான் என்றாலும், அதனுள் அமைந்துள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோ மற்றும் பிலிம் எஜூகேஷன் இன்ஸ்டியூட் உள்ளிட்டவைகள் வெங்கடாத்திரி என்பவரால் தனியாக நடத்தப்படும் நிறுவனங்களாகும்.

பிரிவியூ தியேட்டருடன் கூடிய இந்த ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் கடந்த சில வருடங்களாக நிறைய திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள், படத்துவக்க விழாக்கள், பிரீமியர் காட்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறுவது வழக்கம்.

அப்படி அஜீத்தின் வீரம் பேனர் பிரமாண்டமாக வைக்கப்பட்டு, சில நாட்களில் அங்கு மன்சூரலிகானின் அதிரடி பட பூஜை சமீபமாக அதிரடியாக அரங்கேறியது! அப்பொழுது மன்சூர் அன்று ஒருநாள் மட்டும் ஆர்கேவி ஸ்டுடியோவை வாடகைக்கு பேசியிருந்தார். அதனால் தன் பட பிமாண்ட பிளக்ஸ்போர்டுகள், வினயல் பேனர்களால் விஜயா கார்டன் மற்றும் ஆர்.கே.வி. ஸ்டுடியோவை அலங்கரித்தார்.

அங்கு வாயிலில் இருந்த அஜீத்தின் வீரம் பட மெகா விளம்பர போர்டின் மீதும் தன் அதிரடி பட விளம்பர போர்டை அன்று ஒருநாள் மட்டும் மன்சூர் வைத்திருந்தது கண்டு கேடம்பாக்கமே மூக்கின் மேல் விரல் வைத்தது.

காரணம் அதிரடிக்கு முதல்நாள் அதே ஆர்.கே.வி ஸ்டியோவில் ஆடியோ விழா கண்ட நீ என் உயிரே படத்தின் பேனர்கள் தொடங்கி நேற்று(ஜனவரி 8ம் தேதி) மாலை ஆடியோ விழா கண்ட கற்பவை கற்றபின் பட விழாக்கள் வரை நடந்தேறிய மற்ற படங்களின் பிளக்ஸ்போர்டுகள், வினயல் பேனர்கள் எல்லாம் வீரம் மெகா சைஸ் விளம்பர போர்டை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகேயும், எதிரிலும் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் மன்சூரின் அதிரடி படத் தொடக்க விழா பேனர் மட்டும் அதிரடியாக வீரம் விளம்பர போர்டை மறைத்து அன்று ஒருநாள் மட்டும் வைக்கப்பட்டிருந்தது என்றால் பாருங்களேன்!

அல்டிமேட் ஸ்டாரே ஆனாலும் மன்சூரின் அதிரடி கொஞ்சம் காமெடி, நிறைய அதிரடி...!!



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT