RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

காங்கிரசுடன் திட்டவட்டமாக தி.மு.க. கூட்டணி இல்லையா? கருணாநிதி விளக்கம்

From: 'விஸ்தாரம்'

POST 119/1/2014, 5:59 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
காங்கிரசுடன் திட்டவட்டமாக தி.மு.க. கூட்டணி இல்லையா? கருணாநிதி விளக்கம்

சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைக்குமா என்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:

கேள்வி: மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-லிருந்து 12 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறதே?

பதில்: அது மக்களுக்கு நல்லது தானே?

கேள்வி: மதுரையில் ஒட்டப்பட்ட ‘போஸ்டர்'களை அழகிரியின் ஆதரவாளர்கள் தாங்கள் ஒட்டவில்லை என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்: என்ன ‘போஸ்டர்' என்று எனக்கு தெரியாது.

கேள்வி: மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் உங்களைச் சந்தித்த போது கூட்டணி பற்றி பேசப்பட்டதா? என்ன அடிப்படையில் அவர் உங்களை சந்தித்தார்?

பதில்: நட்பு அடிப்படையில் தான் சந்தித்தார். அவர் எப்போது இங்கே வந்தாலும் என்னைச் சந்திப்பார். அந்த முறையில் வேலூரில் ஒரு விழாவிற்காக வந்தவர் தான் வழியிலே இங்கே இருக்கிற என்னைப் பார்த்துவிட்டு சென்றார்.

கேள்வி: அவரிடம் இனி காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டீர்களா?

பதில்: அவர் அதைப்பற்றி பேசவில்லை. அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை.

கேள்வி: மாநிலங்களவைக்கு அ.தி.மு.க. சார்பில் நிற்பது போல, எஞ்சியுள்ள ஓர் இடத்தைப் பற்றி வேறு கட்சியுடன் பேசியிருக்கிறீர்களா?

பதில்: அதைப்பற்றி இன்னும் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரையில், காலியான இடத்திற்கு ஒருவரை நிறுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT