RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

விளம்பரங்களுடன் இலவச சினிமா... கேரளாவில் அறிமுகமாகும் புது வியாபார டெக்னிக்!

From: 'விஸ்தாரம்'

POST 16/6/2014, 6:32 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப் படும் ஸ்பான்சர்களைப் போன்ற வியாபார உக்தியை கேரளாவில் சினிமாவிலும் அறிமுகப் படுத்தவுள்ளனர்.

கனவுத் தொழிற்சாலை என அழைக்கப் படும் திரைத்துறை உலகளவில் அதிக வருமானம் தரும் முக்கியத் தொழில்களில் ஒன்றாக உள்ளது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்கள் அப்படத்தை திரையிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் லாபமடைகின்றனர்.

திருட்டு விசிடி, இணையம் போன்றவற்றின் காரணங்களால் திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் படம் திரையிடப் பட்ட சில தினங்களுக்குள்ளாகவே லாபம் பார்த்து விட வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

இதனால் தங்கள் படங்களுக்கு புதிய வித்தியாசமான விளம்பரங்களை செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக படத்திற்கு ஸ்பான்சர் செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

எஸ்.வினோத் குமார் இயக்கத்தில் நந்து, முன்னா, மகாலட்சுமி ஆகியோரின் நடிப்பில் ‘டெஸ்ட் பேப்பர்' என்றொரு படத்தை தயாரித்துள்ளார் மனோஜ் குமார். இப்படம் வரும் 13ம் தேதி கேரளாவில் ரிலீசாகவுள்ளது. இப்ப்டம் மூலம் தொழில் மரபை தகர்க்கும் ஒரு புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப் பட உள்ளது.

அதாகப் பட்டது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களுக்கு ‘ஸ்பான்ஸர்கள்' இருப்பது போல், திரையரங்குகளில் காட்டப்படும் படத்துக்கும் விளம்பரதாரர்களை ஸ்பான்ஸர்களாக்க மனோஜ் குமார் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இந்த படத்தை கேரளா முழுவதும் மக்களுக்கு டிக்கெட் இல்லாமல் இலவசமாக திரையிடப் போவதாக மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.

இம்முயற்சியின் முதல் கட்டமாக வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் ‘டெஸ்ட் பேப்பர்' படம் திரையிடப்பட உள்ளது. அதற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இத்திட்டம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த படம் ஓடும் போது திரையிடப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் கட்டணம் வாயிலாகவே மக்கள் டிக்கெட்டுக்கு செலுத்துவதற்கு நிகரான லாபம் கிடைத்து விடும் என்று மனோஜ்குமார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

டிவியில் தான் இந்த கம்ர்சியல் பிரேக் தொல்லை என்றால், இனி சினிமாவிலும் அப்படித்தானா என மக்கள் பயந்து விட வேண்டாம் எனக் கூறியுள்ள மனோஜ்குமார், இப்படத்தின் தொடக்கத்திலும், பின்னர் இடைவேளையின் போதும் மட்டும் விளம்பரங்கள் திரையிடப்படும் என விளக்கமளித்துள்ளார்.

தங்கள் பகுதியில் ‘டெஸ்ட் பேப்பர்' படம் ஓடும் திரையரங்கத்தின் பெயரைக் கூறி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT