RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தி.மு.க.,வா... பா.ஜ.,வா? யாருடன் கூட்டணி? தே.மு.தி.க., பொதுக்குழுவில் நாளை முடிவு

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:42 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய, தே.மு.தி.க., பொதுக்குழு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நாளை கூடுகிறது. தி.மு.க., பா.ஜ., கட்சிகள் கூட்டணிக்கு தூது விடுத்து, வலை விரித்து காத்திருப்பதால், தே.மு.தி.க.,வின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், சிறிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அணியை வலுவாக்க, தே.மு.தி.க., வருகை அவசியம் என்ற நிலையில், தி.மு.க., திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வை இழுக்க, எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறது.அதற்காக அக்கட்சி கையாண்ட தந்திரங்கள் அதிகம். தே.மு.தி.க., மாவட்ட செயலர்களுக்கு, முதலில், தி.மு.க., தரப்பில் வலை விரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுக்குழுவில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, அவர்கள் குரல் கொடுப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கு அடுத்தபடியாக, தே.மு.தி.க., தலைமையுடனும், அதற்கு நெருக்கமான வட்டாரத்துடனும் பேசி, கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையிலும் தி.மு.க., இறங்கி உள்ளது.

இதற்காக இக்கட்சி பயன்படுத்திய ஆட்கள் அதிகம். விஜயகாந்த் பேராயர் சந்திப்பு மட்டுமே வெளிப்படையாக நடந்தது. மற்ற எல்லா சந்திப்புகளுமே, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சார்பில், அவரது தம்பி தேவராஜ், இரு கட்சிக்கும் இடையே தூதராக செயல்பட்டு வருகிறார்.

தென் மாவட்டத்தை சேர்ந்த, நாயுடு சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர், கட்சி பிரமுகர், கோவையை சேர்ந்த ஓட்டல் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஸ்டாலினுக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளர், முன்னாள் கலெக்டர் என, பல தரப்பில் இருந்தும், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, தே.மு.தி.க., தலைமைக்கு, "பிரஷர்' கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் பேசியதும் தெரியவந்துள்ளது.இந்த முயற்சியின் விளைவாக, கூட்டணிக்கு விஜயகாந்த் சம்மதித்து விட்டதாகவும், 6ம் தேதி, தே.மு.தி.க., அலுவலகத்திற்கு ஸ்டாலின் வரவிருப்பதாகவும், தே.மு.தி.க., வட்டாரம் தெரிவித்தது.

அதையடுத்து, விஜயகாந்த் அறிவாலயம் வந்து, கருணாநிதியை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்வார் என, தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.இதற்கிடையில், பா.ஜ.,வும் தனது முயற்சியை கைவிடவில்லை. காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை முடித்து, ஒதுங்கிக் கொண்டார்.

அடுத்த கட்டமாக, பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., அலுவலகம் சென்று, விஜயகாந்த்தை சந்தித்தனர். அதற்கு அடுத்த நாளும் சந்திப்பு தொடர்ந்துள்ளது.

தி.மு.க., வலையில் தே.மு.தி.க., மா.செ.,க்கள் :

தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே, கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்கப் போவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். அதன்படி, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்துக் கேட்க இருக்கிறார். இதனால், உஷாரான தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை கூட்டணியில் வீழ்த்த புதிய வியூகத்தை வகுத்துள்ளது.

பொதுக்குழுவில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பேசுவதற்காக, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் மூலம் இந்த ஏற்பாடு நடந்துள்ளது. சமுதாய அடிப்படையில், நட்பை ஏற்படுத்தி, தே.மு.தி.க.,வினரை, தி.மு.க., தலைமை சிக்க வைத்துள்ளது.

எனவே, தே.மு.தி.க., பொதுக்குழுவில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான கருத்து மேலோங்கும் என, கூறப்படுகிறது. எட்டு ஆண்டுகளாக, அரசியல் ரீதியாக எந்த வருமானமும் இல்லாத நிலையிலும், கட்சி வளர்ச்சிக்காக, மாவட்ட செயலர்கள் ஏராளமாக செலவழித்துள்ளனர். இதனால், கூட்டணி தொடர்பாக அவர்கள் கருத்தை கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் தே.மு.தி.க., தலைமைக்கு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT