RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆதார் அட்டை கட்டாயப்படுத்துவதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:50 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மதுரை:'அரசின் சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டை அவசியம் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்கனவே, உள்ள நடைமுறைப்படி, காஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும்,' என தாக்கலான வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி நாராயணபுரம் வக்கீல் ஆனந்தமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஆதார் அட்டை வழங்கும் பணிக்காக, மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்காக, வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம், மக்களின் கைரேகை, கண் கருவிழி மற்றும் தனி அடையாளங்களை பதிவு செய்து, அட்டைகளை வினியோகிக்கிறது.

ஏற்கனவே வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமானவரி கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தை அரசின் பொது சேவைகளை பெறுவதற்கு, அடையாள மற்றும் முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது.

ஆதார் அட்டை வழங்கும் நிறுவனம், மத்திய அரசின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்ல. அந்நிறுவனம், இந்தியர்களின் ரகசியங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி, ஆதார்
அட்டையை வழங்கியிருக்கலாம்.
அரசின் அடிப்படை உதவிகள், மானியங்களை பெற ஆதார் அட்டை அவசியம் என கட்டாயப்படுத்தக்கூடாது என்று, ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆதார் அட்டையை சமர்ப்பிக்குமாறு, மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவிட்டது.

இதை எதிர்த்த, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? என மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காஸ் ஏஜன்சிகளில் சிலிண்டருக்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண், வங்கி கணக்கு எண் சான்றுகளை சமர்ப்பிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் செயல்.
மானிய விலை காஸ் பெற, ஆதார் கட்டாயம் எனக்கூறும் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். காஸ் ஏஜன்சிகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இறுதி உத்தரவு வரும் வரை, அரசின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, காஸ் சிலிண்டர்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். மத்திய கேபினட் செயலாளர், உள்துறை செயலாளர், பெட்ரோலியத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை
ஜன.,7 க்கு ஒத்திவைத்தனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT