RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

சீரியல்களில் கிரியேட்டிவ் ஹெட் ஆதிக்கம்… விரட்டப்படும் இயக்குநர்கள்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 4:58 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சினிமாவில் இயக்குநர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள்தான் திரைப்படம் என்ற கப்பலின் கேப்டனாக செயல்பட்டு படமெடுக்கின்றனர்.

ஆனால் சின்னத்திரையில் கிரியேட்டிவ் ஹெட் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

சின்னத்திரையில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர், நடிகையர்களுக்கு கார்டு போட்டுவிட்டு நடிக்க வைப்பது சகஜம். ஆனால் தற்போது சீரியலை இயக்கும் இயக்குநர்களே பாதியில் விரட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதுதான் பரிதாபம்.

ரம்யாகிருஷ்ணன் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து நடிக்கும் தொடர் வம்சம். சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. தொடரின் ஆரம்பத்தில் சி.ஜே. பாஸ்கர்தான் வம்சம் தொடரை இயக்கினார். ஆனால் என்ன நடந்ததோ பாதியிலேயே விலகிவிட்டார்.

தொடரில் நடிகர், நடிகைகள் தேர்வு முதல், கதை வரை பல விசயங்களில் ரம்யா கிருஷ்ணன் தலையீடு இருந்ததே விலகலுக்கு காரணம் என்று பேசப்பட்டது. அதேபோல இன்றைய சீரியல் கலாச்சாரம் ரசிக்கும் படியாக இல்லை என்று சி.ஜே.பாஸ்கரே ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற பிரபல தொடரை இயக்கியவர் அழகர். தொடரின் பிரபலத்தையும், ரேட்டிங்கையும் வைத்து 7 சி என்ற தொடரையும் விஜய் டிவியில் இயக்கினார். 450 எபிசோடுவரை இயக்கிவந்த அழகர் திடீரென்று சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து விரட்டப்பட்டார்.

சரவணனாக நடித்த செந்திலும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவும் காதலிப்பதாக ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்ததே அழகர் விலக்கப்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

விஜய் டிவியில் தாயுமானவன் தொடரின் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன். தொடர் வித்தியாசமாக இருக்கிறது என்று பெரும்பாலானவர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தது.

நூறு எபிசோடுகள் வரை அழகாய் சென்று கொண்டிருந்த தாயுமானவன் தொடர் திடீரென்று சராசரி சீரியலைப் போல மாறிவருகிறது. காரணம் தொடரின் இயக்குநர் மாறியதுதான் என்கின்றனர். இப்போது தாயுமானவன் தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கிவருகிறார்.

அண்ணாமலை, பாட்சா, போன்ற திரைப்படங்களின் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா. சன் டிவியின் மகாபாரதம் தொடரின் இயக்கம் மற்றும் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஆனால் இப்போது மேற்பார்வை என்று மட்டும்தான் சுரேஷ்கிருஷ்ணாவின் பெயர் வருகிறது.

இதுபற்றி கருத்து கூறிய சுரேஷ்கிருஷ்ணா, மகாபாரதம் தொடரை ஆரம்பிக்கும்போதே அதன் கடைசி வரை செல்வோம் என்று எனக்கு தோன்றவில்லை. காரணம் ஒரே புராஜக்டில் என்னால் வருஷக் கணக்கில் லாக் ஆகியிருக்க முடியாது. அதனால் ஆரம்ப கட்ட பணிகளை செய்து கொடுத்துவிட்டு விலகிக் கொள்கிறேன் என்று சொல்லித்தான் அந்த தொடரில் கமிட் ஆனேன். அதற்கான நேரம் வந்தபோது விலகிக் கொண்டேன். மகாபாரதத்தை ஆரம்பிக்கும்போது சந்தோஷம் இருந்ததைப்போல விலகும்போது வருத்தமும் இருந்தது என்று கூறியுள்ளார்.

இப்போது புதுயுகம் சேனலில் உணர்வுகள் என்ற தொடரை தயாரித்து வருகிறார். நானே தயாரிப்பாளராவும் இருக்குறதால சுதந்திரமா வேலை செய்ய முடியுது. அதோடு புது சேனல்ல நல்ல மரியாதை தர்றாங்க. அவுங்களோட அப்ரோச் பிடிச்சிருக்கு என்றும் கூறியுள்ளார்.

இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா சொல்வதைப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டால் மட்டுமே இயக்குநர்களால் தொடரில் தாக்குபிடிக்க முடியும் போலிருக்கிறது. அதனால்தான் திருமுருகன், திருச்செல்வம் போன்ற இயக்குநர்கள் தாங்களே தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளனர் போலிருக்கிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SIMILAR TOPICS IN OTHER WEBSITES WITH "சீரியல்களில் கிரியேட்டிவ் ஹெட் ஆதிக்கம்… விரட்டப்படும் இயக்குநர்கள்"

-

» இயக்குநர்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படணும்? - இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி
SPONSORED CONTENT