RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ரூ.20 கோடி செலவில் சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் அரசு: சல்லு, மாதுரி ஆட்டம்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 5:02 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
லக்னோ: முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரில் ரூ.20 கோடி செலவில் பாலிவுட் நட்சத்திர கொண்டாட்டம் நடந்துள்ளது.

ரூ.20 கோடி செலவில் சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் அரசு: சல்லு, மாதுரி ஆட்டம் 10-1389349000-bollywood-232600-jpg

உத்தர பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைபாயில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட சைபாய் மகோத்சவ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து வர 7 தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமான செலவு மட்டும் ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

ரூ.20 கோடி செலவில் சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் அரசு: சல்லு, மாதுரி ஆட்டம் 10-1389348859-bollywood434-600-jpg

வசூல் மன்னன் சல்மான் கான் மேடையில் தபாங் பட பாடலுக்கு ஆடி பார்வையாளர்களை அசத்தினார்.

நடிகை மாதுரி தீக்சித் மகோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லக்னோவில் உள்ள சைபாய் விமான நிலையம் வந்தபோது எடுத்த படம். மாதுரி பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

பாலிவுட் ரசிகர்கள் பலரின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை ஆலியா படம் மகோத்சவ் நிகழ்ச்சியில் கலக்கலாக நடனம் ஆடினார்.

ரூ.20 கோடி செலவில் சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் அரசு: சல்லு, மாதுரி ஆட்டம் 10-1389348887-akhilesh-yadav3434-600-jpg

கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்தும் சைபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தவிக்கையில் ஆட்சியில் உள்ளவர்கள் பாலிவுட் நட்சத்திரங்களின் ஆட்டம் பாட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் தொகுதிக்கு ஆட்சியாளர்கள் வர மாட்டார்களா, நமக்கு ஏதாவது நல்லது நடக்காதா என்று முசாபர்நகர் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சைபாய் கொண்டாட்டத்திற்கு வந்த நடிகை ஜரீன் கானை விமான நிலையத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ் வரவேற்றபோது எடுத்த படம்.

சைபாய் மகோத்சவ் நிகழ்ச்சிக்காக அகிலேஷ் யாதவ் அரசு சுமார் ரூ. 20 கோடி செலவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பணம் வாங்காமல் நடனம் ஆடியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவர்களுக்கு ரூ.5 முதல் 10 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சைபாய் மகோத்சவ் நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். முசாபர்நகரில் நிவாரண முகாம்களை அரசு மூடி வருகையில் இத்தனை கோடி செலவில் இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்தப்பட்டது என்பதை தெரிவிக்க சமாஜ்வாடி கட்சி தவறிவிட்டது.

மாநிலத்தில் அரசின் உதவி நாடி மக்கள் நிற்கையில் இப்படி தாராளமாக செலவு செய்து சைபாய் மகோத்சவ் நடத்திய அகிலேஷ் யாதவ் அரசு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாதுரி தீக்சித், நசிருத்தீன் ஷா நடிப்பில் இன்று ரிலீஸான தேத் இஷ்கியா இந்தி படத்தின் சிறப்பு காட்சியை அகிலேஷ் யாதவ், தனது குடும்பத்தினருடன் இன்று பார்ப்பதாக இருந்தது. ஆனால் பாலிவுட் கொண்டாட்டம் நடத்தியதற்கு கடும் கண்டனம் கிளம்பியதால் இந்த காட்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT