RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தமிழகத்தில் இளம் பெண்கள் 900 பேர் மாயம்!

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:23 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமிழக போலீசில், 2013ம் ஆண்டு, 2,999 பேரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 900 பேர் இளம்பெண்கள்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், சொத்து பிரச்னையால் துரத்தப்பட்டோர், குடும்ப தகராறு காரணமாக தலைமறைவானவர், பிடிக்காத திருமணத்தால் வீட்டை விட்டு ஓடிய பெண், ஏழ்மையால் குடும்பத்தில் இருந்து துரத்தப்பட்டோர் என, பல்வேறு காரணங்களால் மாயமானதாக, புகார்கள் அதிகரித்து வருகின்றன.

30 சதவீதம் அதிகரிப்பு:

கடந்த, 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த புகார்கள், 2013ல், 30 சதவீதம் அதிகரித்து உள்ளன.

போலீஸ் இணையதள தகவல்படி, தமிழகம் முழுவதும், 2013 ஜனவரி, 1ம் தேதி துவங்கி, டிச., 29 வரை, 2,999 பேர் காணவில்லை என, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை மாநகரில், 880 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேலூரில், 149 புகார்களும், மதுரை மாநகரில் 107, மதுரை புறநகரில் 50, திருப்பூர் 101, கோவை மாநகர் 57, மாவட்டம் 52, சேலம் மாநகர் 52, மாவட்டம் 22, தூத்துக்குடி 76, திருச்சியில் 49 என, தமிழகம் முழுவதும், 2,999 புகார்கள் பதிவாகி உள்ளன.இதில், 70 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, காணாமல் போனவர்களை மீட்டு, குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

மொத்தமுள்ள புகார்களில், 1,510 ஆண்கள், 1,297 பெண்கள் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டது.புகாரில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டவர்களில், 900 பேர் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 725 பேரை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இவர்களில், 520 பேர் காதலுக்கு பெற்றோர், உறவினர் எதிர்ப்பு தெரிவித்தால், தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் அனுமதி:

இந்த புகார்களில், 125பெண்களை, அவர்களுடைய காதல் கணவருடன், தொழில் நகரங்களான சென்னை, பெங்களூரு, திருப்பூர், கோவை, ஈரோட்டில் மீட்ட போலீசார், பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கேயே தங்கவும் அனுமதி அளித்துள்ளனர். 120 குழந்தைகளை காணவில்லை என, புகார் பெறப்பட்டதில், 100 குழந்தைகளை, மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரையில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களில், பலரை சென்னை, கோவை, திருப்பூரில் மீட்டுள்ளனர்.

இளம்பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருவது, பெண்களை பெற்ற பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

புகாரில் குறிப்பிடப்பட்டவர்களில், 89 பேர் இறந்துள்ளனர். அதில், 29 பேரின் உடல் மீட்கப்பட்டு, பெற்றோர், கணவன், குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்படும் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, காணாமல் போனவர்களை மீட்டு கொடுக்க, மேலும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக அளவில், இந்த புகார்களில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், அங்கு புகார்கள் மீதான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் இது தான்காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் இளம்பெண்கள் முதலிடத்தையும், முதியவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இளம்பெண்கள் காதலாலும், முதியவர்கள் குழந்தைகள் தங்களை கவனிக்க மறுப்பதாலும், மாயமாவது தெரிய வந்துள்ளது.

இதை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், காணாமல் போவோர் குறித்த புகார்களின் எண்ணிக்கை, குறைய வாய்ப்புள்ளது என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT