RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஒரே படத்தில் தனுஷ், விஜய் சேதுபதி…?

From: 'விஸ்தாரம்'

POST 116/1/2014, 4:21 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் ஈகோ என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற டவுன் டு எர்த் மனநிலையில்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி. கதையும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் எத்தனை ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவும், ஹீரோயினே இல்லாமல் நடிக்கவும் விஜய் சேதுபதி தயார்.

இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு, புறம்போக்கில் ஆர்யா, ரம்மியில் இனிகோ என்று இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எந்த கஷ்டமும் இல்லை. விரைவில் தனுஷுடன் ஒரு படம் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மலையாள தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ராதிகாவின் ராடன் நிறுவனத்துடன் இணைந்து படங்களாக தயாரித்து தள்ளுகிறார். முதல் படம் சென்னையில் ஒரு நாளுக்குப் பிறகு இவர்கள் இணைந்து தயாரித்து வரும் படம் புலிவால். முதல் படத்தைப் போலவே புலிவாலும் மலையாளத்தில் லிஸ்டின் தயாரித்த படத்தின் தமிழ் ரீமேக்தான்.

விரைவில் தனுஷ், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை லிஸ்டினும், ராதிகாவும் இணைந்து தயாரிக்கயிருப்பதாக செய்தி. ராதிகாவும் இது குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்தப் படமும் லிஸ்டின் மலையாளத்தில் தயாரித்த படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்ற அபிப்ராயமும் இருக்கிறது.

விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT