RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

டிவி சீரியல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!… நோட் பண்ணுங்கப்பா!!

From: 'விஸ்தாரம்'

POST 127/6/2014, 4:50 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலம் போய் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டின் வரவேற்பறையிலேயே சினிமா, சீரியல்களைப் பார்த்துவருகிறோம்.

சினிமா, சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள்,பொது அறிவு வினாவிடைகள், விவாதநிகழ்ச்சிகள் என பலவும் தொலைக்காட்சி மூலம் வீட்டிற்குள் வருவதால் அனைவரும் அதை பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீரியல்களில் காட்சிப்படுத்தப்படும் சில நிகழ்வுகள், அருவெறுக்கத்தக்கதாகவும், ஏற்றுக்கொள்ளவே முடியாததாகவும் இருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை தொடங்கி, நாத்தனாரின் பழிவாங்கல், அண்ணியின் உள்குத்து, அக்காமகனின் சொத்துக்களை அடையத்துடிக்கும் தாய்மாமன் என பலதரப்பட்ட சம்பவங்கள் வீட்டின் வரவேற்பு அறைக்கே வருகிறது.

காலைமுதல் நள்ளிரவுவரை ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களைப் பார்ப்பதன் மூலம் குடும்ப உறவுகள் ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்து போனதோடு, உறவுகளில் விரிசல் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.



POST 227/6/2014, 4:52 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இன்றைக்கு சீரியல்களில் அதிகம் படம்பிடிக்கப்படுவது திருமணமான ஆண்களை காதலிப்பது தவறில்லை என்பதுதான். அதற்காக அவர்கள் செய்யும் வில்லத்தனம் எக்கச்சக்கம். எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ?

சன் டிவியில் காலையில் ஒளிபரப்பாகும் சொந்த பந்தம் தொடர் ஆரம்பம் முதலே கர்ண கொடூரமான வசனங்களும், காட்சியமைப்புகளுமே உள்ளது. திருமணமான மாமன் மகனை அடைய வில்லியின் திட்டங்கள் கொடூரத்தின் உச்சம்.

இதேபோன்ற கதையும், காட்சியமைப்பும்தான் பொன்னூஞ்சல் தொடரிலும் வைக்கப்பட்டுள்ளது. திருமணமான மாமன் மகளை எப்படியாவது அடையவேண்டும் என்று அத்தையும், அத்தைமகளும் சேர்ந்து போடும் திட்டங்களைப் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு எப்படித்தான் இரவில் தூக்கம் வருகிறதோ?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாசமலர் நெடுந்தொடரில் வீட்டு மருமகளை துரத்திவிட்டுவிட்டு பணத்திற்காக வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக மாமியார் செய்யும் செயல்கள் யாருமே யோசிக்க முடியாதது.

இரவு ஒன்பது மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தென்றல் தொடரிலும் இதே கதைதான் திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளும் பெண்ணின் கதை. அதற்கு மாமியாரும் உடந்தையாக இருப்பதுதான் கொடூரம்.

ஒருநாள் இரண்டுநாள் அல்ல, கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திலுமே இதை கதைதான். பழிவாங்குவது, கூட இருந்தே குழிபறிப்பது போன்ற கதைகள்தான் சீரியல்களாக உலாவருகின்றன.



POST 327/6/2014, 4:53 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ வைப்பதற்கே எதிர்ப்பு உள்ளது. ஆனால் வீட்டின் வரவேற்பு அறையில் அனைவரும் அமர்ந்து பார்க்கும் அனைத்து சீரியல்களிலுமே தினசரியும் டாஸ்மாக் பார் சீர் வந்துவிடுகிறது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதை பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

ஏன் இப்படி வில்லத்தனமும், பழிவாங்கும் நடவடிக்கையும் என்று கேட்டால்? மக்கள் விரும்புறாங்க, நாங்க கொடுக்கிறோம் என்று கூறுகின்றனர் சீரியல் தயாரிப்பாளர்களான ராதிகா,குஷ்பு,சுஜாதா விஜயகுமார், குட்டிபத்மினி, ரம்யாகிருஷ்ணன் போன்றவர்கள். அதான் மகாபாரத்திலேயே இதுபோன்ற பழிவாங்கும் கதை இருக்கே என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.

மெகா சீரியல் பார்ப்பவர்கள் பெரும்பாலும் அந்த சீரியலில் வரும் சில பாத்திரங்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள். அதேபோல் அதில் வரும் சில வக்கிரப் பாத்திரங்களுடன் தனக்கு யாரைப் பிடிக்காதோ அவர்களுடன் இணைத்து விடுகிறார்கள்.

சீரியலில் படம்பிடிக்கப்படும் சில காட்சிகளால், குடும்பத்தில் குழப்பம் கும்மியடிக்கிறது. நல்ல உறவுகளைக்கூட சந்தேகக்கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.

மெகா சீரியல்களில் சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையில் நாம் இதுவரை சந்தித்தே இருக்காத கதாபாத்திரங்களாக இருப்பது மட்டும் இல்லாமல், நமக்கு பிடிக்காத சிலரை அவர்கள் நல்லவர்களாவே இருந்தாலும் அந்த கதாபாத்திரமாக நினைக்க வைத்து, அவர்களைப் பற்றி மிக கொடூரமாக கற்பனை செய்யவும் காரணமாக உள்ளது.

மாலைநேரத்தில் பொதுவாக விளக்கேற்றும் நேரத்தில் போடப்படும் சீரியல்களில் பேசப்படும் வசனங்கள் எல்லாமே கர்ண கொடூரமானதாக இருக்கும். நா கூசும் வார்த்தைகள், அமங்கலச் சொற்களாக அரங்கேறும்.

மட்டரகமான காட்சிகளையும் வசனங்களையும் பார்த்து ரசிப்பது வீட்டில் இருக்கும் பெரியவர்களும்,இல்லத்தரசிகளும்தான். அவர்களுடன் குழந்தைகளும் இவற்றை காண நேரிடுகிறது. மனித உணர்வுகளுடன் விளையாடும் இதுபோன்ற சீரியல்களினால் நம் அனுமதி இல்லாமலேயே நம் மனதிற்குள் வக்கிர எண்ணங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிதர்சனம்.



POST 4

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT