RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இந்த வார ராசி பலன்(3.1.2014 முதல் 9.1.2014 வரை)

From: 'விஸ்தாரம்'

POST 13/1/2014, 9:47 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மேஷம்:

பொது: எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். சொத்து வாங்க இது உகந்த வாரம் இல்லை. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் மந்தமான நிலை ஏற்படலாம்.



POST 23/1/2014, 9:48 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ரிஷபம்:

பொது: உங்கள் காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகே நல்லபடியாக நடக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு: மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தாரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலுவலக வேலைகள் சுமூகமாக நடக்கும். சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு வேலை பளு அதிகரிக்கும்.



POST 33/1/2014, 9:48 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மிதுனம்:

பொது: புதிய காரியங்களில் ஈடுபடும் முன்பு நன்கு யோசிப்பது நல்லது. உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்கவும்.

பெண்களுக்கு: குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். அதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். கடன் தொல்லைகள் தலை தூக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வேலையில் கூடுதல் கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.



POST 43/1/2014, 9:49 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கடகம்:

பொது: சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களை தள்ளிப் போடுவது நல்லது. உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம்.

பெண்களுக்கு: வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடன் மனம் திறந்து பேச வேண்டாம். பெரியோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திட்டமிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க தற்போதைக்கு வாய்ப்புகள் குறைவு. உங்களின் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.



POST 53/1/2014, 9:50 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சிம்மம்:

பொது: தடைகளை தகர்த்து உங்கள் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் பெரிய நபர்களை சந்திக்கக்கூடும். புதிய ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தள்ளிப் போடவும்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அப்போது உறவினர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களை நம்பி உங்களின் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள்.



POST 63/1/2014, 9:50 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கன்னி:

பொது: உற்சாகமாக காணப்படுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் தீரும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பண வரவு தாமதமாகலாம். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். சமையல் அறையில் வேலை செய்யும் போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். அதனால் கால, நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த வாரம்.



POST 73/1/2014, 9:51 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
துலாம்:

பொது: திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரக்கூடும்.

பெண்களுக்கு: உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லைகள் ஏற்படலாம்.

வேலை பார்ப்போருக்கு: உங்களின் வேலைகளை நிதானமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் பிரச்சனை ஏற்படலாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நலம். வியாபாரிகள் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.



POST 83/1/2014, 9:51 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
விருச்சிகம்:

பொது: வரவுக்கேற்ற செலவும் உண்டு. உங்களின் காரியங்கள் நினைத்ததை விட விரைவாக முடியும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: பழைய கடன்களை சமாளிக்க புதிய கடன் வாங்க நேரலாம். குழந்தைகள் உங்களின் சொல்படி நடப்பார்கள். கணவரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைகளை திட்டமிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். விடுப்பில் சென்றுள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு வழக்கமான வருமானம் உண்டு.



POST 93/1/2014, 9:52 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தனுசு:

பொது: பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பரை வழியில் சந்தித்து மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் காரியங்கள் அனைத்தும் திருப்திகரமாக முடியும்.

பெண்களுக்கு: கணவர் பாசமாக இருப்பார். அதனால் குதூகலமாக காணப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: திறம்பட பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். யாருக்கும் தேவையில்லாமல் அறிவுரை வழங்க வேண்டாம். வியாபாரிகள் லாபத்தை பெருக்க திட்டமிடுவீர்கள்.



POST 103/1/2014, 9:52 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மகரம்:

பொது: சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு: புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பம் அமைதியாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்வீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். முக்கிய வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களை பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யும் முயற்சியை தள்ளிப் போடவும்.



POST 113/1/2014, 9:53 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கும்பம்:

பொது: நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும். கடன் தொல்லைகள் தீரும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருக்கவும்.

பெண்களுக்கு: பெற்றோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அக்கம் பக்கத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். குடும்பம் அமைதியாக நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: கடுமையாக உழைத்தால் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரிகள் உற்சாகமாக செயல்படுவீர்கள்.



POST 123/1/2014, 9:53 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மீனம்:

பொது: தக்க நபர்களின் உதவியோடு உங்களின் காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிலர் உங்கள் பெயரை கெடுக்க முயற்சி செய்யக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். சிரமங்கள் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு: பயணங்களால் மகிழ்ச்சி அடையக்கூடும். கடன் தொல்லைகள் ஏற்படக்கூடும். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். பொறுமையாக இருந்து பெருமை தேடிக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு சற்று குறையும். வேலைகளை திட்டமிட்டு செய்யவும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் லாபம் பெறுவர்.



POST 13

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT