RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

த்ரிஷா மூலம் தமிழில் காலூன்ற திட்டமிடும் புனித்ராஜ்குமார்!

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:45 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமிழில் உருவாகும் மெகா பட்ஜெட் படங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் வெளியாவது போன்று பெங்களூரிலும வெளியாகி வசூலித்து வருகின்றன. இதனால் தமிழ்ப்படங்களால் கன்னட படங்களின் வசூல் பெரிதும பாதிக்கப்படுகிறதாம்.

இதை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்ப்படங்களை மொழி மாற்றம் செய்வது ஆபத்து என்று, தமிழிலேயே நேரடியாக வெளியிட மட்டுமே அனுமதி அளித்துள்ளது கர்நாடக அரசு.

இந்நிலையில், கர்நாடகத்திலுள்ள சில ஹீரோக்களுக்கு தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் வெளியாவது போன்று, தங்களது படங்களையும் தமழ்நாட்டில் வெளியிட வேண்டும் என்ற ஆசை சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறதாம்.

அதன்முன்னோட்டமாகத்தான் தான் நடித்த அன்னாபாண்டு என்ற படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டார் புனித்ராஜ்குமார். அப்படத்தில் குத்து ரம்யாவை நடிக்க வைத்திருந்தனர். ஆனால் அப்படம் இரண்டொரு நாட்கள்கூட ஓடவில்லை.

இருப்பினும், தமிழ்நாட்டிலும் காலூன்ற வேண்டும் என்ற முயற்சியை விடாமல் செய்து வரும புனித்ராஜ்குமார், அடுத்து கன்னடத்தில் தான் நடிக்கும் ஒரு படத்திற்கு த்ரிஷாவை புக் பண்ணியிருப்பவர், அப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறாராம்.

அதோடு, சில கோலிவுட் நடிகர்களையும் படத்தில் இணைத்துக்கொண்டால் இன்னும் வெயிட்டாக இருக்கும் என்று த்ரிஷாவோடு மேலும் சில பிரபலங்களையும் பட்டியல் போட்டுள்ளாராம் புனித்ராஜ்குமார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT